Tuesday, May 7, 2019

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்


கெக்கிராவ - இபலோகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இன்று பிற்பகல் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள பெண், இபலோகம – கோணபதிராவ பகுதியை சேர்ந்த 48 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: