Tuesday, May 7, 2019

175 டெட்டனேட்டர்கள் மீட்பு


மொரகஹஹேன – தலகல பகுதியில் காணியொன்றில் இருந்து 175 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி நிலத்தை சீர்செய்து கொண்டிருந்த வேளை அங்கு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அது தொடர்பில் பெக்கோ இயந்திரத்தின் உரிமையாளர் காவல்துறைக்கு அறிவித்திருந்த நிலையில், பின்னர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Author: verified_user

0 comments: