Tuesday, May 7, 2019

தொலைதொடர்பு வலையமைப்புக்களை துண்டிக்கும் சாதனங்களுடன் ஒருவர் கைது


தொலைதொடர்பு வலையமைப்புக்களை துண்டிப்பதற்காக பயன்படுத்தப்படும் 8  சாதனங்களுடன் நபரொருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு காவல்துறையும், காவல்துறை அதிரடிப்படையினரும் இணைந்து இன்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு – லாசரஸ் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Author: verified_user

0 comments: