Tuesday, May 7, 2019

10 லட்சம் அரிய உயிரினங்களை இழக்கும் துர்பாக்கிய நிலை!!

பல லட்சக்கணக்கான உயிரினங்கள், அழியும் நிலையில் உள்ளதாக அமெரிக்க குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. . குறித்த குழுவினர் சுமார் 50 நாடுகளில் 145 நிபுணர்களை கொண்டு பல்லுயிர்களின் பெருக்கம் குறித்து நடத்திய ஆய்வின் அறிக்கையில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

அதில், மனித வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் என பல்லுயிர்கள் அழிவின் விளிம்பை நோக்கி வேகமாக சென்று கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமான IUCNன் அறிக்கையின் படி, உலகில் 4ல் ஒரு பங்கு விலங்குகள், பறவைகள் அழிந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சம் உயிரினங்கள் அழிந்து வருவதாக குறித்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த அழிவின் விளிம்பில், அரியவகை என கருதப்படும் நீர் தவளை, கருப்புக் கொண்டை குரங்கு இனங்கள், பிலிப்பியன் கழுகு, றோயல் ஆமை, தாபிர், சிஃபாகா குரங்கு, காண்டாமிருகம் உள்ளிட்ட இனங்களும் வேகமாக அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமுர் சிறுத்தை, கறுப்பு காண்டாமிருகம், போர்னியன் ஒரங்குட்டான், க்ராஸ் ரிவர் கொரில்லாக்கள், சுமத்ரன் யானை ஆகிய விலங்குகளும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

இதேவேளை, மூன்றில் 1பங்கு பாலூட்டிகள் 40% இருநிலை வாழிகள், 33% பவளபாறைகள் உள்ளிட்ட நீர்நிலை வாழிகள் பேராபத்தில் உள்ளதாகவும் குறித்த ஆய்வு கூறுகின்றது. குறித்த பல்லுயிர்களின் அழிவிற்கு மனிதர்களின் தவறான செயல்பாடுகளே முக்கிய காரணம் என்று குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

Author: verified_user

0 comments: