நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீட்டை வழங்கும் நிகழ்விற்கு இடையே இன்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் வந்து ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றுவதாக, தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரொருவர் குற்றம் சாட்டியதால் இந்த அமைதியின்மை ஏற்பட்டது.
நீர்கொழும்பு - தம்மிட்ட கார்தினால் மையத்தில் சுற்றுலா துறை, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் இந்த இழப்பீட்டு வழங்கும் நிகழ்வு இடம்பெற்ற நிலையில், அதில் அமைச்சர் உரையாற்றினார்.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டு இழப்பீட்டை பெறவந்த நபரொருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

0 comments: