Showing posts with label LOCAL NEWS. Show all posts
Showing posts with label LOCAL NEWS. Show all posts

Tuesday, October 15, 2019

வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய

வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்ல - கோத்தாபய

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று -15- ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது கோத்தாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்லவெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை மையப்படுத்தியே ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவளிக்கின்றார் எனவும் இதன்போது தெரிவித்தார் கோத்தாபய ராஜபக்ஷ.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம் எனவும்  இராணுவத்திற்கு தான் தலைமைதாங்கவில்லையெனவும் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதன் போது ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றவுடன் பிரதமர் பதவி மாறும் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பே கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்க காரணம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சற்று முன் அறிவிப்பு..!

தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சற்று முன் அறிவிப்பு..!


இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர் அமைச்சர் திகாம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தொகையை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்று வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 13, 2019

வறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...!

வறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...!



“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்டு குடிவந்தோம்.

எனது தந்தை நில அளவை ஊழியர். அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது. இரவு நேரம் படிப்பதற்காக தபால் கந்தோருக்கு வருவோம். மின் விளக்கொளியில் படிப்பதற்கு இருந்த இடம், இந்த தபால் கத்தோர்தான்.

விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் விளாம்பழம் விற்போம். எனது அக்காவும் அம்மாவும் இந்த கூட்டத்துக்கு வந்திருக்குறாங்க. அக்காவின் கையில் தீக் காயத்தின் தழும்பு இருக்கும். அது கூலிக்கு பனியாரம் சமைக்கும்போது ஏற்பட்ட தீக் காயம்.

அன்று தம்புத்தேகம வைத்தியசாலையின் வைத்தியர் ஒரு தமிழ் ஐயா. எனது தந்தை வேலை செய்த நில அளவை அலுவலகத்தின் பிரதானி ஒரு தமிழ் ஐயா. தம்புத்தேகம புகையிரத நிலைய அதிகாரியும் ஒரு தமிழ் ஐயா. நாங்கள் அவர்களோடு நெருக்கமாக வாழ்ந்தோம். ஆனால் ஆட்சியாளர்கள் எங்களுக்கிடையில் ஒரு யுத்தத்தைச் சுமத்தி அவை அனைத்தையும் இல்லாமலாக்கினார்கள். எங்களோடு நெருக்கமாக வாழ்ந்த பலரை நாங்கள் இழந்திருக்கின்றோம். அந்த வேதனையையும் வலியையும் நாங்கள் அறிவோம்.

ஏழ்மையின் வெறுமையை நன்கு அறிந்தவர்கள் நாங்கள். குடியிருக்க உருப்படியான வீடு இல்லையென்றால், பிள்ளைகளுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லையென்றால், ஒழுங்கான சுகாதார சேவை இல்லையென்றால், மனதுக்கு ஓய்வு இல்லையென்றால், அந்த இடத்தில் நாம் வாழத்தான் வேண்டுமா?

கடந்த 71 வருடங்களாக, எனது பெற்றாரும்தான், பிழையான அரசியலொன்றை தெரிவுசெய்திருந்தார்கள். ஆயிரம் எதிர்பார்ப்புக்களுடன் ஓர் அரசியல் கட்சிக்கு அவர்கள் வாக்களித்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் எதனையும் அவர்களால் நிறைவுசெய்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

நாம் உங்கள் மக்கள். மக்களின் பிரதிநிதிகள். இனியும் நீங்கள் எங்களைப் புறக்கணிப்பது நியாயமாகாது. அந்த வெற்றிடங்களை நிறைவுசெய்யும் நோக்கோடு உங்களுக்காக, இந்த நாட்டுக்காக, நாட்டின் எதிர்காலத்துக்காக ஜனாதிபதி தேர்தலுக்கு வந்திருக்கின்றோம்.

71 வருடங்களாக கிடைக்காத சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெற்றுக்கொள்ளும் பாதையொன்றை திறந்து தருவோம்”

____________________________________
2019.10.08 ஆம் திகதி தனது சொந்த ஊரான தம்புத்தேகமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக ஆற்றிய உரையில் இருந்து
ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் - ஹக்கீம்

ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் - ஹக்கீம்

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். 
இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள நிலையில் முஸ்லிம் தலைமைகளின் கருத்து குறித்து தெரிவிக்கையில் அவர் இவற்றைக் கூறினார். 
போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு

போக்குவரத்து விதியை மீறியவர்களுக்கு மும்மொழிகளிலும் தண்டனைச்சீட்டு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமிழ்பேசும் மக்களின் நன்மையை கருத்தில்கொண்டு அதிமேதகு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வீதி பயணத்தின் போது வழங்கப்படும் தண்டனைச்சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை காலமும் வாகன சாரதி வீதிப்போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில் குறித்த சாரதியின் வாகன உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு தண்டனைச்சீட்டு  வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைச்சீட்டில் தண்டனைகள் என்ன ஏது என்பது தொடர்பில் சிங்கள மொழியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தன.

 வடமகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் இதுதொடர்பில் தமக்கு தெளிவின்மை காணப்படுவதாகவும் இதனை மாற்றியமைத்து தமிழில் அவை வழங்கப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த தண்டனைச்சீட்டில்  மூன்று மொழிகளிலும் தண்டனைகள் என்ன என்பது தொடர்பில் குறிப்பிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறாக தண்டனைச்சீட்டில் குறிப்பிடப்படும் இலக்கத்தினை அதன் மறுபக்கத்தில் உள்ள தண்டனைப்பட்டியலில் இலகுவில் அறிந்துகொள்ளமுடியும் .
 போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.