Tuesday, May 7, 2019

இலங்கையில் யாசகம் எடுக்கும் தமிழக மீனவர் - அதிர்ச்சி தகவல்!


23 வருடங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடியின் போது காணாமல் போனதாக கருதப்பட்டு அண்மையில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட தமிழக மீனவரான எஸ். பரதனை, நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தார் வலியுறுத்தியுள்ளனர்.

த ஹிந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த மீனவர் 1996ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போனதாக கருதப்பட்டார்.

எனினும் அண்மையில் த ஹிந்து பத்திரிகை குறித்த மீனவர் கொழும்பில் யாசகம் செய்து வருகின்ற நிலையில் அவரது புகைப்படத்துடன் செய்தியை பிரசுரித்திருந்தது.

இதனைக் கொண்டு அவரை அடையாளம் கண்ட அவரது மகள், மாவட்ட காவற்துறை நிலையத்தின் ஊடாக மாவட்ட ஆட்சியாளருக்கு முறைப்பாட்டை அனுப்பி அவரை மீட்க உதவுமாறு கோரியுள்ளார்.

Author: verified_user

0 comments: