Tuesday, May 7, 2019

வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாக வந்த ஜீப் வண்டி - காணொளி


ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் ஹபரணை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த 10 வயதான குறித்த சிறுவன் மீது ஜீப் வண்டி மோதி நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்து ஏற்படும் போது குறித்த ஜீப் வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



சம்பவம் தொடர்பில் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Author: verified_user

0 comments: