பொலன்னறுவை – மெதிரிகிரிய, தியசேன்புர, பெரகும்பாபுர வீதியில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொதியை மெதிரிகிரிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்றைய தினம் இந்த பொதி மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த பொதியை பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை அதிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள், மின்னேரிய இராணுவ முகாமின் அதிகாரிகளின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: