Showing posts with label SRI LANKA. Show all posts
Showing posts with label SRI LANKA. Show all posts

Thursday, June 13, 2019

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, ஹிஸ்புல்லா வழங்கிய வாக்குமூலத்தின் தொகுப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, ஹிஸ்புல்லா வழங்கிய வாக்குமூலத்தின் தொகுப்பு

பயங்கரவாதி சஹ்ரானுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானாரான ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் அளித்தார்.

2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

2017 வரை சஹ்ரான் ஹாசீம் மதத் தலைவராகக் கருதப்பட்டார். இதன் பின்னர் அவர் ஐ.எஸ். குழுவுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிய வருகிறது.

உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பதை நான் கூறினேன். அச்சத்திலுள்ள முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அந்த கருத்தை நான் வெளியிட்டேன்.

2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சஹ்ரான் என்னை தோற்கடித்தார். எல்லா அரசியல் தலைவர்களை போல நான் சஹ்ரானை சந்தித்தேன். சஹ்ரான் என்னையும் எனது குடும்பத்தினரையும் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் ஒரு பயங்கரவாதி. ஆனால் அவர் அப்போது அப்படி இருக்கவில்லை.

2017 ற்கு பின்னர் சஹ்ரானோ அவரது சகாக்களோ காத்தான்குடியில் இருக்கவில்லை. அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது எனக்கு தெரியாது.

சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த தேர்தல் காலங்களில் எனக்கு தொல்லை இருக்காது. எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்.

காத்தான்குடியில் அரபு மொழிகளில் பெயர்ப்பலகைகள் இருப்பது அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரவே. அரபு மொழி பெயர்ப்பலகைகள் இடக் கூடாது என்று சட்டம் இல்லை.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை. முஸ்லிம் மக்கள் தான் ஆயுதம் ஏந்துவார்கள் என்று கூறினேன் என அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு தீவிரவாதத்தை பிரசங்கிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் பொலிஸார் அனுமதி கொடுத்திருந்தார்கள் என்றும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

அரபு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலேயே கிழக்கில் பெயர்பலகைகளில் அரபு மொழி சேர்க்கப்பட்டது. அரபு மொழியை பயன்படுத்த வேண்டாமென சட்டம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, June 12, 2019

எனது சொந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்த முடியாது - முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் Dr. MLAM Hizbullah

எனது சொந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்த முடியாது - முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் Dr. MLAM Hizbullah

Image may contain: outdoorஉண்மையில் தாய் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தை நீண்டகால கடனுதவி அடிப்படையில் உருவாக்க ஹிஸ்புல்லாஹ் என்ற தனிமனிதனால் முடிந்திருக்கிறது. அரசியல்,கொள்கை வேற்றுமைகளுக்கு அப்பால் அனைவராலும் பாராட்டத்தக்க பெரும் சாதனை இது .
இதற்கு சட்டவிரோதமாக நிதி சேகரித்தார் அல்லது முறைகேடு செய்தார் என்பது நிரூபணமானால் அதற்கான தண்டனையை அரசாங்கம் வழங்கட்டும். மாறாக ஒரு தனி மனிதனின் சொந்த முயறசியை மழுங்கடிக்கச் செய்து அந்த தனியார் பல்கலைக்கழகத்தை அவ்வாறு மாற்ற வேண்டும், இவ்வாறு மாற்ற வேண்டும் , இவற்றுக்கு பயன்படுத்தவேண்டும் என்று சிலர் கூக்குரலிடுவது தொழில்துறையில் இயலாமையினால் ஏற்படும் பொறாமைகளேயன்றி வேறில்லை .
மேலும் , உலகத்தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தை நேரில் காண யாருக்குதான் ஆசை இருக்காது. அந்த வகையில் அனுமதி மறுக்கப்பட்டும் விடாப்பிடியாக ''பெற்றிகலோ கெம்பஸ்'' சென்று அதனை பார்வையிட்ட மதிப்புக்குரிய ரத்ன தேரர் எம்.பி க்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 3 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள வியாழேந்திரன்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 3 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள வியாழேந்திரன்

Image may contain: 2 peopleமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன் வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் பதிவு செய்துள்ளார்.
இன்று(12) பிற்பகல் 3,30 மணியளவில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குறித்த முறைப்படினை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்.
ஒன்று ஓட்டமாவடியிலிருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காளிகோயிலை உடைத்து காளிகோயில் காணியில் ஹிஸ்புல்லா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பாவித்து மீன் சந்தை கட்டியமை , தனக்குச் சார்பாக தீர்ப்பு சொல்லாத நீதிபதியை இடம் மாற்றி தனக்கு சார்பான நீதிபதியை நியமித்து தீர்ப்பை மாற்றி எழுதியமை,
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு நடைபெற்ற மறுநாள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் பாசிக்குடா விடுதியில் இருந்த மூன்று அரேபியர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாட் டை விட்டு வெளியேற்றியமை அதில் ஒருவர் விசா இன்றி தங்கி இருந்தமை உள்ளிட்ட குற்ற சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
(Source: Virakesari)
அப்பாவி முஸ்லிம்களுக்கு சிறையில் கொடுமைகள் நடக்கின்றன - எமது சமூகம் அழிந்து விடக்கூடாது

அப்பாவி முஸ்லிம்களுக்கு சிறையில் கொடுமைகள் நடக்கின்றன - எமது சமூகம் அழிந்து விடக்கூடாது

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார். அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்  தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் பதவிகளிலிருந்து விலகினோம், ஆனால் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டோம் என்றே சொல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பதவிகளில் இருந்து விலகும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை.

எனினும் அடுத்த நாள் காலையில் இருந்து இடம்பெற்ற சம்பவங்கள் எங்களை பதவி விலக வைத்தது. இன்றைய நிலைமையில் இதனை செய்யாவிடின் பாரிய விளைவை நாங்கள் எதிர்நோக்க நேரிடும் என முஸ்லிம் தலைவர்களுடன் கலந்துரையாடும்போது நாங்கள் தீர்மானித்தோம்.

ஞானசார தேரரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும் நாங்கள் இராஜினாமா செய்த அன்று கண்டியில் வைத்து எங்களது சமூகத்தை அழிப்பேன் ஒவ்வொரு வீட்டையும் மரண வீடாக்குவேன் என அவர் கூறி செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும், அன்றையதினம் எங்களது சமூகம் இருக்கின்ற கிராமங்களுக்கு, எங்களது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் எங்களால் எமது சமூகம் அழிந்து விடக்கூடாது, குறிப்பாக என்னால் எனது சமூகத்திற்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக கூட்டாக சேர்ந்து முடிவெடுத்து எங்களது பதவிகளைத் துறந்தோம்.

நாங்கள் இராஜினாமா செய்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நிலைமைகளை தெளிவுப்படுத்தினேன். எனினும் நான் உங்களை பதவியில் இருந்த விலக்க மாட்டேன் நீங்கள் வேண்டுமானால் இராஜினாமா செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

மேலும், நாளைய தினம் நீங்கள் இராஜினாமா செய்யாவிட்டாலும் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி என்னிடம் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. உண்மையில் அந்த இக்கட்டான சூழலில் எங்களை பதவி விலக விடாமல் எவ்வாறு சூழ்நிலையை சமாளிக்கலாம். கலவரங்களை கட்டுப்படுத்தலாம் என சிந்தித்து அதனை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய தவறிவிட்டார்.

ஆளுநராக பதவி வகிக்கும்போது என்னால் பேச முடியாமல் போய்விட்டது. எனக்கு எதிராக நிறைய முறைப்பாடுகள் வந்தன. இவ்வாறான முறைப்பாடுகள் வரும்போது நான் ஒரு ஆளுநர் என்ற அடிப்படையில் பதில் அளிக்க முடியாத சூழல் எனக்கு இருந்தது. இப்போது பதவி இல்லை. மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன்.

இஸ்லாத்தில் வஹாபிசம் என்பது அடிப்படைவாதம் அல்ல. அது ஒரு பிழையான கருத்து. இஸ்லாத்தில் அடிப்படைவாதமும் கிடையாது.

அதேபோல தௌஹீத் என்பது ஒரு மார்க்கம். கட்டாயம் தௌஹீத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் ஒருவன் மாத்திரமே என்பதுதான் தௌஹீத். அது ஒரு கொள்கை. குண்டு வைப்பது தௌஹீத் அல்ல. யாராவது ஒருவர் தௌஹீத்தை மறுத்தால் அவர் முஸ்லிம் அல்ல.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினை சஹ்ரான்தான் உருவாக்கினார். எனினும் தற்போது அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டிற்கு பிறகு சஹ்ரான் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

எனக்கு தெரிந்தவரையில் 2017ஆம் ஆண்டின் பின்னர் அந்த அமைப்பில் சஹ்ரான் இல்லை. வெளியில் சென்று அவர் சிலரை சேர்த்துக்கொண்டு தனியான குழுவொன்றை அமைத்து அதன் ஊடாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

சஹ்ரான் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை செய்து கொண்டுதான் இருந்தார். உண்மையில் அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 2017ஆம் ஆண்டு வரையில் மார்க்கத்தில் கடுமையான தீவிரமாக சஹ்ரான் செயற்பட்டார்.

எதாவது குழபத்தை சஹ்ரான் உண்டுபன்னிக்கொண்டே இருந்தார். மாதத்திற்கு ஒன்றை சொல்லுவார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார்.

அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என அப்பாவி பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் பல கொடுமைகள் நடத்தப்படுகின்றன.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் ஒரு லட்சம் தா, ஐம்பதாயிரம் ரூபா தா என பணம் கேட்டு தொல்லை செய்கின்றனர். இல்லாவிட்டால் அடிப்போம் என கூறுகின்றனர். எனக்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி கோரிக்கை

இலங்கை அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி கோரிக்கை


அனைவருக்கும் சமமான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை இலங்கை அரசாங்கம், தொடர்ந்தும் உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், சுவிட்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரதமருடன் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது இது தொடர்பிலான தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Tuesday, June 11, 2019

மகாநாயக்க தேரர்களிடம், முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியது என்ன...?

மகாநாயக்க தேரர்களிடம், முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியது என்ன...?



குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கும் தயாராகவுள்ளோம். அதற்காக அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுத்தக் கூடாது என்று கூட்டாக பதவி விலகிய முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். 

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை குறித்து மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இனவாதத்தைத் தூண்டுவதற்காகவும், ரிஷாத் பதியுதீனை பாதுகாப்பதற்காகவும் அரசியல் நோக்கத்துடனும் நாம் அனைவரும் இந்த முடிவை எடுத்ததாக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் நாம் அதற்காக இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை.

முஸ்லிஸ்களை அடிப்படைவாதிகளாகச் செயற்பட வேண்டாம் என்று கூறிவிட்டு சில பௌத்த மதகுருமார்கள் சிங்கள மக்களை தவறான முறையில் வழிநடத்துகின்றனர். மக்களும் அதற்கு ஏற்பட தவறான வழியில் செல்கின்றனர். பொலிஸாரும் இவற்றை கண்டுகொள்வதில்லை. இவ்வாறானவர்களால் தான் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகவும் பதவி விலகிய முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
முஸ்லிம் சமூகம் கொண்டாட வேண்டிய, ஒரு சிங்கள அரசியல்வாதி

முஸ்லிம் சமூகம் கொண்டாட வேண்டிய, ஒரு சிங்கள அரசியல்வாதி

இலங்கை முஸ்லிம் சமூகம் பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு சார்பாகவும் பேசிவரும் ஒரு சிங்கள அரசியல்வாதி.

* முஸ்லிம் கடைகள், வீடுகள் அண்மையில் தீயிட்டு கொளுத்தப்பட்ட போது முஸ்லிம் சமூகம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எவ்வாறு உதவுகின்றனர் என்று புள்ளிவிபரத்தோடு பாராளுமன்றத்தில் பேசியமை.

* இனவாதத்தை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய ஹிரு , தெரண சேனல்களுக்கு நிதியமைச்சின் விளம்பரங்களை இனி வழங்க மாட்டோம் என்று தடை செய்தமை.

* நோன்புப் பெருநாளை முஸ்லிம் குடும்பத்தோடு போய் கொண்டாடியமை.

* நேற்று திங்கட்கிழமை மாத்தறையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக முஸ்லிம்களோடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை

என்று இவருடைய முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
சில சிங்கள பக்கங்களின் பதிவுகளை வாசித்தால் விளங்கும் இவரை எப்படியெல்லாம் கழுவி ஊற்றுகின்றனர் என்று.

ஓரிரு நாட்களின் முன் இவருக்கு கம்பஹா மாவட்டத்தில் உள்ள பன்சலைகளுக்கு போவதற்கு தடைவிதிக்கப்பட்டது எத்தனை பேருக்கு தெரியும்.

ஒரு மாற்றுமத அரசியல்வாதி முஸ்லிம்களுக்கெதிராக என்ன சரி கருத்து கூறி விட்டால் பேஸ்புக்கில் அவருக்கு எப்படியெல்லாம் ஏச முடியுமோ அப்படியெல்லாம் ஏசி போடப்பட்ட நூற்றுக்கணக்கான பதிவுகளை பார்க்க முடியும். ஆனால் இவரைப் போன்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு ஆதரவான பதிவுகளை காண்பது அரிதிலும் அரிது. புரியாணியில் போடப்பட்ட முந்திரிக்கொட்டை போன்று ஓரிரண்டு பதிவுகளை மட்டும் பார்க்க முடியும்.

இனவாதத்திற்கு எதிராக பேசும் முஸ்லிம்களை விட இனவாதத்தை தோலுரித்து பேசும் பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் மிகவும் பெறுமதியானவர்கள்.

பெரும்பான்மை இன வாக்குகள் இன்றி, ஒரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினரைக்கூட பெற கடினமாக இருக்கும் தென்மாகாணத்தில் இப்படி ஒரு அரசியல்வாதி இருப்பது காலத்தின் தேவை ஆகும்.

தயவுசெய்து இவர் போன்றவர்களுக்கு எங்களுடைய ஆதரவினையும் காண்பிப்பற்காக அவருக்கு ஆதரவான பதிவுகளை போடுங்கள்/ ஷெயார் செய்யுங்கள்.
பயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய பிரபலம் - அம்பலப்படுத்திய அசாத் சாலி

பயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய பிரபலம் - அம்பலப்படுத்திய அசாத் சாலி


உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் பிரதான சந்தேக நபர் சஹ்ரான் ஹிசிமின் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு, முன்னாள் அஞ்சல் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் ஏ.எச்.ஏம்.ஹலீமின் சகோதரரான சஹீமின் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்கு குழுவில் இன்றைய தினம் சாட்சி வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியுடன், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி மௌலவி மற்றும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்கத்தின் தலைவர் மொஹமட் சுபய்யும் அந்த தெரிவுக் குழுவில் சாட்சி வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ரத்தன தேரர்

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த ரத்தன தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட சிலர் இன்றைய தினம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.


எனினும் பாதுகாப்பு பிரிவு, அவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்நுழைய அனுமதி வழங்கவில்லை.



எனினும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் ரத்தன தேரர் உள்ளிட்ட தரப்பினர் அந்த பல்கலைக்கழகத்திற்கு நுழைந்துள்ளதோடு, அங்கு ஒரு மணி நேரம் அளவில் இருந்துள்ளனர்.

Monday, June 10, 2019

சிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி!

சிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி!

ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக கையில் #அபாயோடு நிற்கும் காட்சி!

இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கெதிராக அபாயா தடை கோஷம் எழுப்புவோர் தமது இனத்திற்காக சவூதி வரை செல்வார்களா..?

 - Rukaiya Ruky -
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு, ராஜினாமாசெய்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதில் கூறவேண்டும்

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு, ராஜினாமாசெய்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதில் கூறவேண்டும்



பயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நாளை மறு தினம் CID பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், இதனால் ரிஷாட் பதியுதீன் தொடர்பான பல்வேறு விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவருமென்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்:-

இந்த அமைச்சர்கள், தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவே இன்று தங்களது பதவிகளிலுருந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். இதனை தற்போது அனைத்து முஸ்லிம்களுக்காக மேற்கொண்டதாக அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் குற்றங்கள் முன்வைக்கப்படவில்லை. மாறாக ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், ஆசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் போன்றோர் மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ரிஷாட் பதியுதீன் மீது படிந்த ரத்தக்கறையை, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் பூசும் வகையில்தான் முஸ்லிம் பிரதிநிதிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரவூப் ஹக்கீமுக்கு ராஜினாமா செய்ய வேண்டிய தேவை ஏன் உள்ளது?

அதாவது, அரசியலில் அவர் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமெனில், இனவாத சக்தியொன்று அவசியமாகும். இதற்காகவே, அவர் ராஜினாமா செய்து கொண்டுள்ளார்.

இது ஒரு அரசியல் விளையாட்டாகவே கருதப்படுகிறது. முஸ்லிம்களுக்கு இதனால் ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பதில் கூறவேண்டும்.

ரிஷாட் பதியுதீன் நல்லவர் போல கருத்து வெளியிடுகிறார். இவருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன.

அந்தவகையில், நாளை மறுதினம் எமக்குக் கிடைத்த இந்தத் தகவல்களை CID பிரிவிடம் ஒப்படைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்போது அனைத்து விடயங்களும் வெளிவரும் என்றார்.

பயங்கரவாதத்தைப் பாதுகாக்க அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதெல்லாம் மக்கள் அதன்பின்னர் அறிந்துகொள்வார்கள்” என அவர் தெரிவித்தார்.
கருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்

கருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்

கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நேற்று (09) மாலை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியலாளர் எம்.பி அலியார் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற "ரண் மாவத்" வீதி அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் ; 

முஸ்லிம் பெண்கள் 03 பிள்ளைகள் பெற்றதன் பிறகு அவர்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.  இதில் 03 பிள்ளைகள் பெற்றதன் பிறகு அவர்களிடத்தில் உடல் நிலையைக் காரணம் காட்டி கருத்தடை செய்துள்ளனர். இந்த விடயம் அண்மையில் இடம்பெற்ற மகப்பேற்று நிபுணர்களுடனான சந்திப்பின் போதே இந்த திடுக்கிடும் தகவல்  தெரியவந்துள்ளது. மேலும் இவ்விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களிடத்தில் பேசியிருந்தோம். விரைவில் இதன் முழு விபரங்களை  வெளியிடுவதுடன், இது ஒரு சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

எனவே இவ்விடயம் பற்றி அரச மருத்துவ சங்கம், மகப்பேற்று வைத்தியர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கிய சங்கத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம். எனவே இது போன்ற இன்னும் பல பிரச்சினைகள் முஸ்லிம் மக்களுக்கு நடைபெறுவதுடன் தற்போது முஸ்லிம் கர்பிணித் தாய்மார்களை  பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

அதேபோன்று வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அவர் அவ்வாறு பெண்களுக்கு கருத்தடை செய்திருந்தால் இவருடன் சேர்த்து 10 பேரை கைது செய்ய வேண்டும். இவர் மட்டும் தனியாக சத்திர சிகிச்சை செய்ய முடியாது. இது திட்டமிட்டு செய்யப்பட சதி நடவடிக்கையாகும். 

மேலும் அண்மையில் மகா சங்கத்தினர் அமைச்சுக்களை மீள பொறுப்பேற்குமாறு அறிவித்திருந்தனர். இது பற்றி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவதாக தீர்மானித்ததிற்கிணங்க பிரதமர், எதிர்க்கட்சி  தலைவர் ஆகியோரை சந்தித்தோம். இன்னும் முக்கியமான கட்சி தலைவர்களையும், அரபுநாட்டு தூதுவர்களையும், மேற்கு நாடுகளின் தூதுவர்களையும் சந்திக்கவுள்ளோம். 

கடந்த 03 ம் திகதி எமது அமைச்சுப்பதவிகளை சமூகத்திற்காகவே துறந்தோம்.  அநேக பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி மிகவும் கவலையுடன் இருக்கின்றனர். யார் மீது குற்றம் சுமத்தப்படுகின்றதோ அவர்களை உடனடியாக விசாரணை செய்து தீர்ப்பினை வழங்க வேண்டும். 

மேலும்  அண்மையில் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்த சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் நன்மை கருதியும், வட கிழக்கிற்கு வெளியே வசிக்கும் முஸ்லிம்களின் நன்மை கருதியும் எமது பதவிகளை துறந்தோம். அவர்கள் நாளை என்ன நடக்கும் என்ற பீதியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவர்கள் நிம்மதியாக வாழவேண்டும். ஏற்கனவே அடிபட்டு நொந்து போயுள்ள இந்த சமூகத்தை பாதுகாப்பது எமது கடமையாகும். எனவேதான் இந்த விடயங்கள் பற்றியும், தற்போது நிலவும் பிரச்சினைகள் பற்றியும் பிரதம மந்திரியிடம் கூறினோம். 

எவ்வளவு விரைவாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் மற்றும் ஏனையோர் விடயத்தில் உடனடி தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த நிலை தொடர்வதனை அனுமதிக்க முடியாது. இந்த நிலைக்கு முடிவு கட்டவில்லையென்றால் நாளை இலங்கையின் முக்கியமான நகரங்கள் ஒவ்வொன்றிலும் பௌத்த பிக்குகள் உண்ணாவிரதம் இருந்து நாட்டை சின்னா பின்னமாக்குவதோடு, தொடர்ந்தும் முஸ்லிம் மக்களை பீதியில் வாழ வைப்பதற்கான வழிவகைகளை செய்துவிடுவார்கள். எனவே இந்த பிரச்சினையில் உரிய அமைச்சருக்கு எதிராக விசாரணை செய்து முடிவை அறிவிக்கும் வரைக்கும் நாம் யாரும் அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம். 

இது இவ்வாறு இருக்கும் போது கடந்த மாதம் சுமார் 2500 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 700 பேர்களை தவிர ஏனையோர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக பாடுபட்ட சட்டத்தரணிகள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். மேலும் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளவர்களின் 'பி"  B அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் மிகுதியாகவுள்ள ஏனையோர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். 

தீவிரவாதற்கும், சஹ்ரானுக்கு துணைபோனவர்களையும் விடுதலை செய்வதற்கு நாம் தயாரில்லை. வாள்கள், கத்திகள் என்பன தற்பாதுகாப்பு ஆயுதங்களும், தேவைக்கு பயன்படும் ஆயுதங்களே அவை. இருந்த போதும் அவைகளை வைத்திருந்ததற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

(சுலைமான் றாபி) 
ஹிஜாபுடன் பஸ்ஸில் சென்ற முஸ்லிம் ஆசிரியையின், தலையை திறந்து செல்லுமாறு இனவாதிகள் வற்புறுத்தல்

ஹிஜாபுடன் பஸ்ஸில் சென்ற முஸ்லிம் ஆசிரியையின், தலையை திறந்து செல்லுமாறு இனவாதிகள் வற்புறுத்தல்

குளியாப்பிட்டியில் இனவாதம் தலைவிரித்தாடுகிறது. 

இன்று -10- குளியாப்பிட்டியில் இருந்து புத்தளம் நோக்கி பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண் ஊழியரின் "தலையை" திறந்து செல்லுமாறு பஸ்ஸில் இனவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். இறுதியில் அவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

Mohamed Muhsi
Aptitude Test Results : University Entrance 2018/2019 - உளச்சார்பு பரீடசை முடிவுகள் 2018/2019 -  பல்கலைக்கழக அனுமதி

Aptitude Test Results : University Entrance 2018/2019 - உளச்சார்பு பரீடசை முடிவுகள் 2018/2019 - பல்கலைக்கழக அனுமதி

Here we have listed the  RELEASED RESULTS OF  APTITUDE TEST for the university Entrance Click on the link to get the results.

Released Results


Qualified List of Uva Wellassa University (Click On The Link)

  1. Bachelor of Business Management in Entrepreneurship and Management
  2. Bachelor of Business Management in Hospitality, Tourism and Events Management
  3. Bachelor of Science in Computer Science and Technology
  4. Bachelor of Industrial Information Technology


Sabaraamuwa
  1. B.Sc.Honours in Physical Education
  2. B.Sc Honours in Sport Sciences and Management


Vavuniya and Rajarata
  1. B.Sc In Information Communication Technology


Pending Results 
Sri Palee campus - 02 
Moratuva university - 04 
University of Kelaniya - 05 
Ramanadan campus - 03 
Swami Vipulananda - 04 
University of the Visual & Performing Arts - 04 
University of Jayawerdenapura 01 
University of Colombo 01 
University of Jaffna 01 
Sabaragamuwa University 01 - Translation
Aptitude Test Results : University Entrance 2018/2019 - உளச்சார்பு முடிவுகள் 2018/2019 பல்கலைக்கழக அனுமதி

Aptitude Test Results : University Entrance 2018/2019 - உளச்சார்பு முடிவுகள் 2018/2019 பல்கலைக்கழக அனுமதி


Here we have listed the  RELEASED RESULTS OF  APTITUDE TEST for the university Entrance Click on the link to get the results.

Released Results


Qualified List of Uva Wellassa University (Click On The Link)


  1. Bachelor of Business Management in Entrepreneurship and Management
  2. Bachelor of Business Management in Hospitality, Tourism and Events Management
  3. Bachelor of Science in Computer Science and Technology
  4. Bachelor of Industrial Information Technology


Sabaraamuwa
  1. B.Sc.Honours in Physical Education
  2. B.Sc Honours in Sport Sciences and Management


Vavuniya and Rajarata
  1. B.Sc In Information Communication Technology


Pending Results 
Sri Palee campus - 02 
Moratuva university - 04 
University of Kelaniya - 05 
Ramanadan campus - 03 
Swami Vipulananda - 04 
University of the Visual & Performing Arts - 04 
University of Jayawerdenapura 01 
University of Colombo 01 
University of Jaffna 01 
Sabaragamuwa University 01 - Translation
அனைத்து பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை

அனைத்து பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை


  பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அரசாங்கத்தினால் நடத்தப்படும் பொது பரீட்சைகளின் சான்றிதழ்களை இணையத்தின் மூலமாக நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகும். 

கல்வி அமைச்சின் டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

இதன் முதற்கட்டத்தின் கீழ் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர சான்றிதழ்கள் இணையத்தின் ஊடாக வழங்கப்படும். 

வங்கி கடன் அட்டைகள் மூலம் இதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தபால் அலுவலங்களில் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
குவைத் சென்ற 41 பேருக்கு நேர்ந்த சோகம்!

குவைத் சென்ற 41 பேருக்கு நேர்ந்த சோகம்!


குவைத் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற 41 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் கடந்த 31ம் திகதி குவைத்தில் அமைந்துள்ள உணவு உற்பத்தி நிறுவனத்தின் விநியோக பிரிவின் உந்துருளி செலுத்துனர்களாக பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்த சிலர் அவர்களை புதிய இடத்திற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து குவைத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அந்நாட்டில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு வந்தவர்களில் 12 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்கள் கண்டி , மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்டவர்களாவர்.