Showing posts with label INTERNATIONAL NEWS. Show all posts
Showing posts with label INTERNATIONAL NEWS. Show all posts

Sunday, October 13, 2019

கத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

கத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

கத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தியிருப்பதை அவதானித்திருக்கக் கூடும். இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு சமூக வலைதளங்கள் ஊடாக வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

வாகனங்கள் ஒன்றையொன்டு முந்திக் கொண்டு செல்ல முற்படுவதனால் இது போன்ற வாகன நெரிசல் ஏற்பட்டு, yellow boxes களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. ஆகவே வாகன ஓட்டுநர்கள் இதனைத் தவிர்ந்து கொள்ளும் படி கோட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்த போக்குவரத்து குற்றத்துக்கு 500 றியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து போலிஸார் இது போன்ற வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான அதிகாரங்களையும் கொண்டுள்ளனர் என்பதாக போக்குவரத்து துறை உயர் அதிகாரி Brigadier Mohammed Saad Al Kharji, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு!

இந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு!

கத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது. மேற்படி குழந்தைகளுக்கான போர்வை சரியான முறைமையைப் பேணப்படாமல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளமையால் குழந்தைகளுக்கு அசௌகரியம் ஏற்படும் என்பது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவற்றைக் கொள்வனவு செய்தவர்கள் IKEA (மேற்படி பொருட்கள் IKEA வின் உற்பத்திகளாகும்) விற்கு சென்று மீள ஒப்படைத்து பணங்களைப் பெற்றுக்கொள்ள அல்லது மாற்றீடாக வேறு பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக அமைச்சு மேலும் தெளிவு படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் நலனில் கத்தார் என்றுமே அக்கரை கொண்டுள்ளது. அதனால் தான் அடிக்கடி இது போன்ற பரிசோதனைகள் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Friday, July 26, 2019

நீங்களும் செயல்படுத்தி பார்க்கலாம் !வட்ஸ் அப்பில் புதிய அம்சம் !

நீங்களும் செயல்படுத்தி பார்க்கலாம் !வட்ஸ் அப்பில் புதிய அம்சம் !

Image result for whatsappமில்லியன் கணக்கான  ஐ ஓஎஸ், ஆண்ட்ரோய்ட்  கைத்தொலைபேசி பாவனையாளர்களின் தகவல் தொடர்பாடலில் முதன்மை வகிக்கின்றது.
ஏறக்குறைய ஒரு தாசப்ததிற்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த மென்பொருள் அந்த நேரத்தில் பிரபலமடைந்தது. இதற்கு முதன்மையான  காரணங்களில் ஒன்று வட்ஸ்அப் செயலி, நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்டுக்களை வழங்கி வருகின்றமையாகும்.
2014 ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் துணை நிறுவனமான வட்ஸ்அப் செயலி, அதன் மென்பொருளை இன்னும் சிறப்பாக வடிவமைக்க புதிய அம்சங்களை தொடர்ந்து வெளியிடுகிறது.
அந்த வகையில், தற்போது ஓடியோ மெசேஜை, வட்ஸ் அப்பை ஓபன் செய்யாமலே கேட்கும் அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. 
முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களிலும் கொண்டு வரப்படும். வழக்கமாக மெசேஜ் நோட்டிபிக்கேஷன் எவ்வாறு வருகிறதோ, எவ்வாறு படிக்கிறமோ, அதே போலத் தான் இனி ஓடியோ மெசேஜ் வரும்.
ஓடியோ மெசேஜ் நோட்டிபிக்கேஷனை க்ளிக் செய்தால் போதும். வட்ஸ் அப் ஓபன் ஆகாமலே, அந்த 
ஓடியோவை கேட்கலாம். இந்த வசதி வேண்டாம் என்று நினைப்பவர்கள், வட்ஸ் அப் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இப்போது குறித்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்களை WABetaInfo என்ற வட்ஸ் அப் அப்டேட்டை கண்காணித்து வரும் இணையதளம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, June 24, 2019

நன்றி மறவா இலங்கைத்தமிழன்.

நன்றி மறவா இலங்கைத்தமிழன்.

Image may contain: 1 person
நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டு யுத்தத்தின் உக்கிரத்தால் வறுமையில் வாழ்ந்த இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மத தமிழ் சகோதரர் ஜீவா ஸ்ரீ கடந்த 9 வருடமாக இஸ்லாமிய நாடான கட்டாரில் பணி புரிந்து வருகிறார்.



உப்பிட்டவரை உள்ளளவு நினை எனும் முதுமொழிக்கிணங்க தனது வறுமை, கஷ்டங்கள் நீங்க தொழில் வழங்கிய கட்டார் நாட்டிற்கு நன்றி செலுத்தும் வகையில், தனது உடலின் கைப்பகுதியில் கட்டார் நாட்டின் அதிபர் ஷேக் அல்-தமீம் அவர்களின் உருவத்தையும் அரபு மொழியில் அவரின் பெயரையும் சேர்த்து பச்சை குத்தி தனது நன்றியுணர்வை வெளிக்காட்டியுள்ளமை மெய்சிலிர்க்க வைக்கிறது. .

இஸ்லாமிய நாடுகளிலிருந்து அபிவிருத்திக்கும் தமது குடும்ப வறுமையைப் போக்கவும் நிதியுதவிகளை பெற்று அனுபவித்து விட்டு, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும் இஸ்லாமிர்களின் ஆடைகளையும் அரபு மொழியையும் தடை செய்யவும் துடியாய்த்துடிக்கும் சில கடும்போக்குவாத பௌத்த, இந்து இனவாதிகள் இந்த சகோதரிடமிருந்து பாடங்கற்றுக்கொள்ள வேண்டும்.

அதே நேரம், இதே நாட்டில் தொழில் புரிந்து கொண்டு, இந்நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தியும் துவேஷங்களையும் காக்கியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சகோதரர்களும் இந்த சகோதரனிடமிருந்து படிப்பினை பெற வேண்டும்.

Wednesday, June 19, 2019

உலகின் மிகச்சிறந்த விமான, சேவையாக கட்டார் ஏர்வேஸ் தெரிவு - Emirates க்கு 5 ஆவது இடம்

உலகின் மிகச்சிறந்த விமான, சேவையாக கட்டார் ஏர்வேஸ் தெரிவு - Emirates க்கு 5 ஆவது இடம்

Skytrax எனப்படும் விமான சேவை தரப்படுத்தல் இணையதளம் உலகின் சிறந்த விமான சேவைகளை வரிசைப்படுத்தி உள்ளது.

இதன்படி 2019 ஆம் ஆண்டின்  மிகச்சிறந்த விமான சேவை வழங்குனர் ஆக கட்டார் ஏர்வேஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The 2019 World Airline Awards were held at the Paris Air Show

கட்டார் ஏர்வேஸ் முதல் இடத்தை பிடிப்பது இது முதல் தடவை அல்ல..
2011, 2012, 2015 and 2017 ஆண்டுகளிலும் முதல் இடத்தை பிடித்தது.

Here are the World’s Top 10 Airlines of 2019:

Qatar Airways
Singapore Airlines
ANA All Nippon Airways
Cathay Pacific
Emirates
EVA Air
Hainan Airlines
Qantas Airways
Lufthansa
Thai Airways

Monday, June 17, 2019

யார் இந்த, முஹம்மது முர்ஸி...? 10 முக்கிய விடயங்கள்

யார் இந்த, முஹம்மது முர்ஸி...? 10 முக்கிய விடயங்கள்


1. அரபுலகிலேயே தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.

2. இவர் இன்றைய அரபுலகில் சாதாரன குடிமானாக இருந்து, அதிபராக பொறுப்புக்கு வந்த முதலாமர்.

3.இன்றைய அரபுலகில் முழு குர்ஆனையும் மனனம் செய்த முதல் அதிபராவார்.

4. இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும், அமைப்பின் முதல் அதிபராவார்.

5. பொது மக்கள் தம்மை வெளிப்படையாக விமர்சிப்பதற்கு அனுமதியளித்த அரபுலகின் முதல் அதிபர் இவர் தான்.இதனால் 30க்கு மேற்பட்ட சேனல்கள் அவரை இரவு பகலாக விமர்சித்து வந்தன.

6. தாம் சிறைவாசம் அனுபவித்த காலங்களில் சிறை அதிகாரியாக இருந்தவரை, சந்தித்து கைகுலுக்கிய உலகின் முதல் அதிபராவார்.

7. அரசு அலுவலகங்களில் தமது படத்தை மாட்டி வைப்பதற்கு தடை விதித்த முதல் அரபுலகின் அதிபர் இவர்தான். 

8, சாதாரன பொதுமக்களைப் போலவே வாடகை வீட்டில் குடியிருந்த முதல் அராபிய அதிபர் இவர் தான்.

9, சாதாரன எகிப்தியர்கள் பெறும் ஊதியத்தை போல இவரும் சம்பளம் சாதாரன சொற்ப சம்பளத்தையே பெற்றுக் கொண்டார்.

10. விடுமுறை காலங்களில் அரசு செலவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லாமல், தமது சொந்த செலவிலேயே சென்ற முதல் அதிபராவார்.

அவர் மக்களுக்கு நன்மை செய்தாரோ இல்லையோ.. தமக்கென்று புதிய வரலாற்றை படைத்து சென்றுள்ளார்.. முஹம்மது முர்ஸி.

இன்றைய அரபுலகின் தலைவர்களை இவரோடு ஒப்பிட்டு பார்த்தால் இவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்என்ற உண்மை நமக்கு தெரிய வரும்.இவரது பதவி நீக்கத்திற்கு பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை இருப்பதாக நம்பப்படுகிறது.40 ஆண்டுகள் எகிப்தில் கொடுங்கோல் ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்களின் கரங்கள் இன்னும் ரானுவத்தில் உயர்ந்து இருப்பதையே இவரது பதவி நீக்கம் உணர்த்துகிறது.இவர் பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு தம்மை வளப்படுத்திக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

(நன்றி:Mohamed Ifthihar Islahi ,Al -Azhary )

டாக்டர் முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்த்திய உரை எகிப்தியர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய உலகின் உள்ளங்களைத் தொட்டுள்ளது, அரபுலகத்தையே திடுக்கிடச் செய்துள்ளது. அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையடைக்கப்பட்டுள்ள அஷ் ஷேய்க் "உமர் அப்துர் ரஹ்மான்" சலபியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அழுத்தமாக சொல்லியவர்.

"நான் குண்டு நுழையாமல் இருக்க எந்தக் கவசமும் அணிவதில்லை. மக்கள்தான் அதிகாரமுள்ளவர்கள், மக்களின் அதிகாரத்துக்கு அப்பால் எந்த அதிகாரமும் இல்லை, நான் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அஞ்சுகிறவன் என்று துணிவாகச் சொல்லியுள்ளார்"

நாட்டின் சின்னமாக நாடே முன்னிலைப்படுத்தப்படவேண்டும், ஜனாதிபதியல்ல. ஏனென்றால் மக்கள் அழியக்கூடியவர்கள் நாடு நிலைத்திருக்கக்கூடியது ஜனாதிபதி பதவி ஏற்ற பின் அரசு, தனியார் நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களை தொங்கவிடுவது சட்டபூர்வமாக தடை செய்யப்படும் என்றும் அதனை மீறுவது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதியை வாழ்த்துவதற்காக செலவுசெய்யப்படும் பணத்தை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் செலவிடுமாறும் குறிப்பிட்டார்.

அவசரகால சட்டத்தை எந்த இடத்திலும் அமுல்படுத்த கூடாது, தனது சம்பளத்தை எகிப்து மக்களுக்காக வழங்கிடுவேன்.  ஜனாதிபதியின் வாகன தொடரணி மூலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு தடையாக அமைய அனுமதிக்க மாட்டேன்,

அரசமாளிகையில் தொடர்ந்து இருக்க மாட்டேன் தனது வீட்டிலேயே இருப்பேன் .

இறைவன் அன்னாரின் பிழைகளை மன்னித்து, அவருக்கு நியாயத்தை மறுமையிலே வழங்கி அவரின் ஏனைய சேவைகளை கபூல் செய்வானாக, சுவனத்தின் ஆக உயர்ந்த அந்தஸ்தில் அவர்களை ஆக்கி அருள் புரிவானாக!!

உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி

Monday, June 10, 2019

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்! கத்தார் முதலாம் இடம் பெற்று அசத்தல்!

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்! கத்தார் முதலாம் இடம் பெற்று அசத்தல்!

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலை Global Finance சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி கத்தார் இராச்சியம் 134,623 GDPகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சவூதிக் கூட்டணி நாடுகள் தொடர்பை துண்டித்த பின்னர் கத்தார் பொருளாராத ரீதியாக வீழ்ச்சியடையவில்லை என்பது இதன் மூலம் தெரிவாகின்றது. 

முதல்  10 இடங்களைப் பெற்றுள்ள நாடுகள் வருமாறு


முதல் 10 இடங்களுக்குள் 3 அரபு நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.  முதல் இடத்த்தில் கத்தாரும், 8 வது இடத்தில் அமீரகமும், 9 வது இடத்தில் குவைத்தும் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 12வது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 99ம் இடத்திலும், தன்னை வல்லசாக்க எத்தனிக்கும் இந்தியா 124 வது இடத்திலும், பாகிஸ்தான் 138வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

Huawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டக்கிராம் செயலி நீக்கம்

Huawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டக்கிராம் செயலி நீக்கம்

Huawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் ​செயலியை உள்ளடக்காதிருக்க பேஸ்புக் நிறுவனம் தயாராகியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தினால் Huawei நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, பேஸ்புக் நிறுவனம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது.

தற்போது Huawei தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் செயலிக்கு பாதிப்புகள் இல்லை எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பேஸ்புக் செயலியை தற்காலிகமாக பயன்டுத்துவதற்கும் வசதிகளுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், புதிதாக வரும் Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக், வட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் உள்ளடக்கப்படாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், Google Play Store ஊடாக குறித்த அப்களை தரவிறக்கம் செய்ய முடியும். எவ்வாறாயினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் போது அந்த வசதிகளுக்கு தடை ஏற்படக்கூடும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில், ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில், ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவ்யோர்க் சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1348 டொலர் 31 சதமாக பதிவாகியுள்ளது.

ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை இவ்வாறு திடீரென உயர்வடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் என கூறப்படுகின்றது.

Friday, June 7, 2019

மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக, மங்கள வத்திக்கானுக்கு கடிதம் அனுப்பினாரா..?

மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக, மங்கள வத்திக்கானுக்கு கடிதம் அனுப்பினாரா..?

கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் மங்கள சமரவீர வத்திக்கானுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன  என விமல் வீரவன்ச எம்,பி சபையில் கேட்டார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித், கடந்த 3 ஆம் திகதி உண்ணாவிரதம் இருந்த ரத்தன தேரரை பார்க்கச்சென்றமையை சுற்றிக்காட்டி நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஜூன் 3ஆம் திகதி வத்திக்கானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் கா்தினால் மல்கம் ரஞ்சித்தின் செயற்பாடுகள் அனைவராலும் வரவேற்கப்பட்டிருந்தன. அனைத்து இன மக்களாலும் அவர் போற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் நிதி அமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு குற்றச்சாட்டாக, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னணில் அமெரிக்கா இருப்பதாக கார்தினல் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனக்கு தெரிந்த மட்டில் அவர் எந்த நாட்டினதும் பெயரை குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. அத்துடன் இந்த நாட்டை சிங்கள பெளத்த நாடாக கார்தினல் அவர்கள் ஏற்றுக்கொண்டதும் தவறாகவே அமைச்சர் அந்த கடிதத்தில் காட்டியுள்ளார்.

எனவே அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் மதத்தலைவர்கள் தொடர்பில் வெறு நாடுகளுக்கு முறைப்பாடு செய்வதாக இருந்தால் நாட்டை எங்குகொண்டு செல்லப்போகின்றீர்கள். இதற்கு முன்னரும் அமைச்சரின் டுவிட்டர் தகவலில், கா்தினால் அவர்கள் இனவாதத்தை தூண்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மதத்தலைவர்களுக்கு அவ்வாறு பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இதேவேளை நிதியமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர, தனது பெயரால் வெளியிடப்பட்டிருக்கும் இது போலிக் கடிதம் என்றும் தான் இவ்வாறன கருத்துக்களை தெரிவித்து எவ்வித கடிதங்களையும் வத்திக்கானுக்கு  அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன் இது தொடர்பில் அவர் குற்றபு புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

Tuesday, June 4, 2019

முஸ்லிம்களின் பாது­காப்பை இலங்கை உறு­திப்­ப­டுத்த வேண்டும் -இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்பு

முஸ்லிம்களின் பாது­காப்பை இலங்கை உறு­திப்­ப­டுத்த வேண்டும் -இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்பு

இலங்­கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்­தப்­பட்ட வன்­மு­றைகள் குறித்து கவலை வெளி­யிட்­டுள்ள இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்­பான ஓ.ஐ.சி முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறும் கேட்­டுள்­ளது.
சவூ­தியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
அந்தத் தீர்­மா­னத்தில் இலங்கை தொடர்­பான விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் மாநாடு கவனம் செலுத்­தி­ய­துடன்  கண்­ட­னத்­தையும் தெரி­விக்­கின்­றது.முஸ்­லிம்­க­ளுக்­கான பாது­கா ப்பை உறுதிப்படுத்துமாறும் மாநாடு கோருகின்றது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ராணியின் முதுகில் கை வைத்த டொனால்டு டிரம்ப்.. வெடித்தது சர்ச்சை!

பிரித்தானிய ராணியின் முதுகில் கை வைத்த டொனால்டு டிரம்ப்.. வெடித்தது சர்ச்சை!

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் முதுகில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கை வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தனது மனைவி மெலனியா டிரம்புடன் அரசு முறை பயணமாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்கிங்காம் அரண்மனையில் டிரம்ப், மெலனியாவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்து நிகழ்ச்சியின் போது, எலிசபெத் ராணியின் முதுகில் டிரம்ப் கை வைத்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி எலிசபெத்தை யாரும் தொட்டு பேசக் கூடாது என்பது விதியாகும்.

அதேபோல் பொது இடத்தில் அரச குடும்பத்தினரிடம் எப்படி பழக வேண்டும் என்பது எழுத்தப்படாத விதியாகும். ஆனால் இதுபோன்ற விதிகள் எதுவும் அரச குடும்பத்தின் இணையத்தில் போடப்படவில்லை.

எனினும், ஏராளமான மக்கள் பழங்கால பழக்கவழக்கங்களை பின்பற்ற விரும்புகின்றனர். இந்நிலையில் தான், ராணியின் முதுகில் டிரம்ப் தொட்டு பேசியது விதிமீறலாக கருதப்படுவதுடன், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Monday, June 3, 2019

அமெரிக்க வீசாவைப் பெற, சமூக வலைத்தளங்களை சோதனை செய்யும் அமெரிக்கா

அமெரிக்க வீசாவைப் பெற, சமூக வலைத்தளங்களை சோதனை செய்யும் அமெரிக்கா

அமெரிக்க வீசாவை எதிர்பார்ப்பவர்களுக்கு டொனால்ட் டிரம்ப்  நிர்வாகம் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளது. 

அந்த புதிய கட்டுப்பாடு என்னவென்றால், இனிவரும் காலங்களில் அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள், தங்களின் சமூக வலைத்தள விபரங்களையும் தர வேண்டுமென்பதே ஆகும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் காரணமாக தற்காலிக வீசா உள்ளிட்ட அனைத்து வீசா விண்ணப்பத்தாரர்களும் அவர்களின் சமூக வலைத்தள விபரங்களை தர வேண்டும். தனிநபர் தகவல்கள் பிரிவில், இதற்கான புதிய குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள், குறித்த வீசா விண்ணப்பப் படிவத்தில் தமக்கு கணக்கு இல்லை என்றும் குறிப்பிடும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இது முக்கியமான நடவடிக்கையாகும். தற்போதைய சூழலில், சமூக வலைதளமே தீவிரவாதிகளின் முக்கிய தகவல் பரிமாற்ற தளமாக உள்ளது. எனவே, சமூக வலைதளத்தை ஆய்வு செய்வதன் மூலம், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மிக்க நபர்கள், அமெரிக்க மண்ணில் நுழைவதை தடுக்க முடியும். அதே சமயம், வீசா விண்ணப்பிப்பவர்கள் சமூக வலைதள விபரத்தில் முறைகேடு செய்தாலோ தவறான தகவல் தந்தாலோ குடியேற்ற ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என எச்சரித்துள்ளனர்.

இதனிடையே இந்தச்சட்டம் கடந்த ஆண்டு வகுக்கப்பட்ட போதிலும் தற்போதுதான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சவுதியில் நாளை செவ்வாய்கிழமை, பெருநாள் என அறிவிப்பு

சவுதியில் நாளை செவ்வாய்கிழமை, பெருநாள் என அறிவிப்பு

சவுதியில் நாளைசெவ்வாய்கிழமை பெருநாள் என அறிவிப்பு

Eid Al-Fitr moon on today, Saudi Arabia calls for sighting Shawwal
ரமலான் முடிந்ததும் சவுதியில் இந்த மூன்று அறிஞர்களுக்கும் மரண தண்டனை

ரமலான் முடிந்ததும் சவுதியில் இந்த மூன்று அறிஞர்களுக்கும் மரண தண்டனை

ரமலான் முடிந்ததும் சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் சல்மான் அல்-அத்வா, அவத் அல்-குர்னி மற்றும் அலி அல்-ஓமரி ஆகியோருக்கு ரமலான் முடிந்ததும், சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் இருந்து அறிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் Middle East Eye இணையதளம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

அல்-அத்வா என்பவர் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த ஒரு "இஸ்லாமிய சீர்திருத்தவாதி". அல்-குர்னி ஒரு போதகர், அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அல்-ஓமரி நன்கு அறியப்பட்ட ஒளிபரப்பாளர் ஆவார்.

இவர்கள் மூவரும் 2017 ம் ஆண்டு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்ட கைது அலையின் போது கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரும் கடந்த மே 1ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் திகதி குறிப்பிடாமலேயே வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சவுதியில் கடந்த ஏப்ரல் 23ம் திகதியன்று ஒரே நாளில் 32 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன்காரணமாக பல நாடுகளில் இருந்து எதிர்வினைகள் ஆற்றப்பட்டன.

இந்த சம்பவமானது சர்வதேச கண்டனம் எவ்வளவு வலிமையானது என்பதைக் கண்டறிய ஒரு சோதனை பலூனாக பயன்படுத்தப்பட்டது என ஒரு ஆதாரம் தெரிவிக்கிறது.
முஸ்லிம்கள் மீதான நவ பாசிச, வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்

முஸ்லிம்கள் மீதான நவ பாசிச, வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்

ஒருதமிழனாய் சிங்கள தேசிய வாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் வடிவம் புதியது என்பதை உணர்கிறேன். சிங்கள ஆழும் சக்திகள் தமிழருடன் இனரீதியான மோதலிலும் பலப்பரீட்சையிலுமே ஈடுபட்டனர். சலுகைகளை நிராகரித்த, அபிவிருக்திகளை பலி கொடுத்த தமிழர் போராட்டங்கள் சிங்கள ஆழும்சக்திகளுக்கு அதிக தெரிவை கொடுக்கவில்லை. 

ஈஸ்ட்டர் தாக்குதலால் நிலைகுலைந்த சிங்கள ஆழும் சக்திகள் அதன் பின்னர் முஸ்லிம்களோடு மோதுகிற வடிவம் வேறு என்பது புலனாகிறது. 1960பதுகளின் முன்னம் அமரிக்க நிறவாதா ஆதிக்கம் கறுப்பர்கள் மீது கட்டவிழ்த்த வெறுப்பு அரசியலின் அம்சங்கள் தெளிவாக இருக்கு. சிங்கள ஆழும் சக்திகளின் தமிழருடனான மோதல் போல முஸ்லிம்களுடனான மோதல் எனக்கு ஓமர் முத்தார் Omar Mukhtar போன்ற படங்களை நினைவு படுத்தவில்லை. மிசிசிப்பி எரிகிறது Mississippi Burning (1988) படத்தைத்தான் நினைவு படுத்துகிறது. இது மிகவும் பரிதாபகரமான நிலமையாகும். பெண்களை இலக்காக்குவது வெறுப்பு அரசியலின் மிக மோசமான வடிவமாகும். அது மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயலாகும். 

சிங்கள பேரினவாதிகளின் தமிழருடனான பலபரீட்ச்சை மோதல் அரசியலுக்கும் முஸ்லிம்களுடனான -1960 களின் அமரிக்க நிறவாதிகளின் மோதல்போன்ற - வெறுப்பு அரசியல் மோதல் வடிவத்துக்கும் இடையில் அமைப்பு ரீதியான அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. தமிழருடன் இனப் பலபரிட்ச்சை இது நவ பாசிச தன்மையுள்ள இனவாத வெறுப்பு. சிங்கள தேசிய வாதத்தின் ஆபத்தான புதிய வளர்ச்சியை அதன் அரசியலை சர்வதேச ரீயாக அம்மணமாக்கவேண்டும்
அவுஸ்திரேலியாவில் பிறை தென்படவில்லை - புதன்கிழமை பெருநாள் என அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் பிறை தென்படவில்லை - புதன்கிழமை பெருநாள் என அறிவிப்பு


அவுஸ்திரேலியாவில் பிறை தென்படவில்லை - புதன்கிழமை பெருநாள் என அறிவிப்பு

Wednesday, May 29, 2019

செவ்வாய் கிரகத்திற்கு நம்ம போக முடியலனா என்ன நம்ம பெயர் போகட்டும்! உடனடியாக அப்ளை செய்யவும்!!

செவ்வாய் கிரகத்திற்கு நம்ம போக முடியலனா என்ன நம்ம பெயர் போகட்டும்! உடனடியாக அப்ளை செய்யவும்!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு செல்லவிரும்புவர்களின் பெயர்களை அனுப்புமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நாசாவின் கனவு திட்டமான செவ்வாயில் மனிதர்களை குடியமர்த்தும் திட்டத்திற்காக கடுமையாக பல ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு ரோவர்  ஒன்றை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. அதனுடன் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ ஒன்றையும் நாசா அனுப்ப திட்டமிட்டுட்டுள்ளது. அந்த ரோவருடன் மைக்ரோ சிப்பில் செவ்வாய் கிரகம் போக விரும்புகிறவர்களின் பெயரை எழுதி அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது. அதன்படி உங்கள் பெயர் செவ்வாய்க்கு செல்ல வேண்டும் என விரும்பினால் நாசாவின் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ரோவரோடு அனுப்பப்படும் மைக்ரோ சிப்பில் நானோ எழுத்துக்களால் பதிவு செய்பவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஏராளமான மக்கள் தங்கள் பெயரை இதில் பதிவு செய்து வருகிறார்கள். பெயரை பதிவு செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என நாசா அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு செல்ல 
விருப்பமுள்ளவர்கள் நாசா இணையத்தளம் மூலம் விண்ணப்பியுங்கள். 


UAE பிரஜைகள் விடுமுறைக்காக இலங்கைக்கு செல்லவேண்டாம் என அவசர அறிவிப்பு!

UAE பிரஜைகள் விடுமுறைக்காக இலங்கைக்கு செல்லவேண்டாம் என அவசர அறிவிப்பு!

றமழான் விடுமுறை காலங்களில் இலங்கைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார மற்றும் சர்வதேச உறவுகள் அமைச்சு தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கினூடாக தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்திற்கு +94 112-301-601 அல்லது அமைச்சின் 800-444-44 என்ற எண்ணுடன் இலவசமாக தொடர்புகொண்டு தகவல்களை அறிந்துகொள்ளலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்புவதற்கான UAE அரசாங்கத்தின் Twajudi சேவையில் பதிவு செய்யுமாறும் தனது பிரஜைகளுக்கு அமைச்சு அறிவித்துள்ளது.