பிரித்தானிய ராணி எலிசபெத்தின் முதுகில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கை வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தனது மனைவி மெலனியா டிரம்புடன் அரசு முறை பயணமாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்கிங்காம் அரண்மனையில் டிரம்ப், மெலனியாவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்து நிகழ்ச்சியின் போது, எலிசபெத் ராணியின் முதுகில் டிரம்ப் கை வைத்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி எலிசபெத்தை யாரும் தொட்டு பேசக் கூடாது என்பது விதியாகும்.
அதேபோல் பொது இடத்தில் அரச குடும்பத்தினரிடம் எப்படி பழக வேண்டும் என்பது எழுத்தப்படாத விதியாகும். ஆனால் இதுபோன்ற விதிகள் எதுவும் அரச குடும்பத்தின் இணையத்தில் போடப்படவில்லை.
எனினும், ஏராளமான மக்கள் பழங்கால பழக்கவழக்கங்களை பின்பற்ற விரும்புகின்றனர். இந்நிலையில் தான், ராணியின் முதுகில் டிரம்ப் தொட்டு பேசியது விதிமீறலாக கருதப்படுவதுடன், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

0 comments: