உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட இன்சாப் அஹமட், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கொன்றின் பிரதான சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.
62 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலுமினியம் , பித்தளை மற்றும் இரும்பு உள்ளிட்ட கொள்கலன் ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதன்படி , கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி வழக்கு மீண்டும் அழைக்கப்பட்ட போது இன்சாப் அஹமட் நீதிமன்றில் முன்னிலையானதாக கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா தெரித்திருந்தார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் இவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி கிரேன்பாஸ் காவற்துறை , நீதிமன்றிற்கு விடயங்களை அறிவித்திருந்த பின்னர் அதன் சந்தேகநபரொருவர் விடுவிக்கப்பட்டார்.

0 comments: