Showing posts with label SRI LANKA. Show all posts
Showing posts with label SRI LANKA. Show all posts
Thursday, June 13, 2019
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, ஹிஸ்புல்லா வழங்கிய வாக்குமூலத்தின் தொகுப்பு
பயங்கரவாதி சஹ்ரானுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானாரான ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் அளித்தார்.
2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
2017 வரை சஹ்ரான் ஹாசீம் மதத் தலைவராகக் கருதப்பட்டார். இதன் பின்னர் அவர் ஐ.எஸ். குழுவுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிய வருகிறது.
உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பதை நான் கூறினேன். அச்சத்திலுள்ள முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அந்த கருத்தை நான் வெளியிட்டேன்.
2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சஹ்ரான் என்னை தோற்கடித்தார். எல்லா அரசியல் தலைவர்களை போல நான் சஹ்ரானை சந்தித்தேன். சஹ்ரான் என்னையும் எனது குடும்பத்தினரையும் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் ஒரு பயங்கரவாதி. ஆனால் அவர் அப்போது அப்படி இருக்கவில்லை.
2017 ற்கு பின்னர் சஹ்ரானோ அவரது சகாக்களோ காத்தான்குடியில் இருக்கவில்லை. அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது எனக்கு தெரியாது.
சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த தேர்தல் காலங்களில் எனக்கு தொல்லை இருக்காது. எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்.
காத்தான்குடியில் அரபு மொழிகளில் பெயர்ப்பலகைகள் இருப்பது அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரவே. அரபு மொழி பெயர்ப்பலகைகள் இடக் கூடாது என்று சட்டம் இல்லை.
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை. முஸ்லிம் மக்கள் தான் ஆயுதம் ஏந்துவார்கள் என்று கூறினேன் என அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு தீவிரவாதத்தை பிரசங்கிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் பொலிஸார் அனுமதி கொடுத்திருந்தார்கள் என்றும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
அரபு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலேயே கிழக்கில் பெயர்பலகைகளில் அரபு மொழி சேர்க்கப்பட்டது. அரபு மொழியை பயன்படுத்த வேண்டாமென சட்டம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Wednesday, June 12, 2019

எனது சொந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்த முடியாது - முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் Dr. MLAM Hizbullah
உண்மையில் தாய் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தை நீண்டகால கடனுதவி அடிப்படையில் உருவாக்க ஹிஸ்புல்லாஹ் என்ற தனிமனிதனால் முடிந்திருக்கிறது. அரசியல்,கொள்கை வேற்றுமைகளுக்கு அப்பால் அனைவராலும் பாராட்டத்தக்க பெரும் சாதனை இது .
இதற்கு சட்டவிரோதமாக நிதி சேகரித்தார் அல்லது முறைகேடு செய்தார் என்பது நிரூபணமானால் அதற்கான தண்டனையை அரசாங்கம் வழங்கட்டும். மாறாக ஒரு தனி மனிதனின் சொந்த முயறசியை மழுங்கடிக்கச் செய்து அந்த தனியார் பல்கலைக்கழகத்தை அவ்வாறு மாற்ற வேண்டும், இவ்வாறு மாற்ற வேண்டும் , இவற்றுக்கு பயன்படுத்தவேண்டும் என்று சிலர் கூக்குரலிடுவது தொழில்துறையில் இயலாமையினால் ஏற்படும் பொறாமைகளேயன்றி வேறில்லை .
மேலும் , உலகத்தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகத்தை நேரில் காண யாருக்குதான் ஆசை இருக்காது. அந்த வகையில் அனுமதி மறுக்கப்பட்டும் விடாப்பிடியாக ''பெற்றிகலோ கெம்பஸ்'' சென்று அதனை பார்வையிட்ட மதிப்புக்குரிய ரத்ன தேரர் எம்.பி க்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 3 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன் வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் பதிவு செய்துள்ளார்.
இன்று(12) பிற்பகல் 3,30 மணியளவில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குறித்த முறைப்படினை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்.
ஒன்று ஓட்டமாவடியிலிருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான காளிகோயிலை உடைத்து காளிகோயில் காணியில் ஹிஸ்புல்லா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பாவித்து மீன் சந்தை கட்டியமை , தனக்குச் சார்பாக தீர்ப்பு சொல்லாத நீதிபதியை இடம் மாற்றி தனக்கு சார்பான நீதிபதியை நியமித்து தீர்ப்பை மாற்றி எழுதியமை,
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு நடைபெற்ற மறுநாள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் பாசிக்குடா விடுதியில் இருந்த மூன்று அரேபியர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாட் டை விட்டு வெளியேற்றியமை அதில் ஒருவர் விசா இன்றி தங்கி இருந்தமை உள்ளிட்ட குற்ற சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
(Source: Virakesari)


