Sunday, June 2, 2019

ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், ஆஸாத் ஸாலி மற்றும் அமைச்சர் றிஷாத் தாமாக இராஜினாமா செய்ய வேண்டியதில்லை.


*இந்த நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகள் இருக்கின்றன.*

*பொளத்த தர்மத்தைப் பாதுகாக்க உத்தியோக பூர்வமான நான்கு மதகுருபீடங்கள் இருக்கின்றன.*

*சிங்கள இனத்தைப் பாதுகாக்க 70% மக்களும் புத்திஜீவிகளும் இருக்கின்றார்கள்.*

*அரசியல் உள்நோக்கங்களுடன் அரசியல்வாதி பிக்கு ஒருவரும், அரசியல் அதிகார பொதுமன்னிப்பு பெற்ற பிக்கு ஒருவரும் மேற்கொள்ளும் அச்சுறுத்தலுக்காக ஒரு சமூகத்தின் பிரதிநதிகள் தாமாக இராஜினாமா செய்வது பிழையான முன் உதாரணமாகும்.*

*இந்த மூவரினதும் தனிப்பட்ட அரசியலுக்கு அப்பால் இந்த இந்த விடயத்தை நாம் அணுக வேண்டும்.*

*நாளை இன்னுமொரு மற்றுமொரு முஸ்லிம் விரோத கோரிக்கையுடன் நோன்பிருக்கலாம், இது எங்கு போய் முடியும்?*

*நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் அவர்கள் விடயத்தில் முடிவை எடுத்து வைத்திருப்பதா அல்லது விலக்குவதா என்பதனை தீர்மானிக்கட்டும்.*

*தேவைப்படின் மூவரும் முஸ்லிம் சிவில் தலைமைகளையும் கலந்தாலோசிக்கட்டும்.*

*ஜனாதிபதி பிரதமர் இணங்கும் பட்சத்தில் இவர்கள் மாத்திரம் நீங்காது  பாராளுமன்றில் மூன்றில் இரு பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தி காபந்து அரசின் கீழ் பொதுத்தேர்தலை நடத்துங்கள்.*

*அரசியல் சதுரங்க ஆட்டத்தில் முஸ்லிம்களை தொடர்ந்தும் பலிக்கடா ஆக்காதீர்கள்*

*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*

Author: verified_user

0 comments: