Monday, June 3, 2019

நாளை செவ்வாய்கிழமை பிறை பாருங்கள், ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள்

நோன்புப் நெருநாள் தின­மான ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு நாளை செவ்­வாய்க்­கி­ழமை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரி­ய­பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

மேற்­படி பள்­ளி­வா­சலின் நிரு­வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன், ஹனபி பள்­ளி­வாசல் நிரு­வா­கிகள் ஆகியோர் மெள­லவி அப்துல் ஹமீத் பஹ்­ஜியின் தலை­மையில் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாட்டில் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

குறித்த தினம் தலைப்­பி­றையைக் கண்­ட­வர்கள் 011 2432110, 077 7140939, 077 7316415 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொண்டு அறி­விக்­கும்­படி கேட்­கப்­ப­டு­கின்­றனர்.


முஸ்­லிம்கள் எவ்­வித கொள்கை முரண்­பா­டு­க­ளு­மின்றி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வழி­காட்­ட­லுக்­க­மைய ஒரே தினத்தில் நோன்புப் பெரு­நாளை நாடு­மு­ழு­வதும் கொண்­டாட வேண்­டு­மென  எம்.எச்.ஏ. ஹலீம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

முஸ்­லிம்­களின் ஒற்­று­மையைச் சிதைப்­ப­தற்கு நாட்டில் ஒரு சில பிரி­வி­னரால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­து­வ­ரு­கின்­றன. எனவே இவ்­வா­றான சூழ்­நி­லை­களில் முஸ்­லிம்கள் கொள்கை வேறு­பா­டு­களை மறந்து தூர­நோக்­குடன் செயற்­பட வேண்டும். முஸ்­லிம்கள் இன­வா­தி­களின் சூழ்ச்­சிக்கு பலி­யா­கி­வி­டக்­கூ­டாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

Author: verified_user

0 comments: