கலாவெ - இபலோகம பகுதியில் பெருமளவிலான வெடிப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது சம்பவம்நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இபலோகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே டேடனேடர் உட்பட வெடிப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
கலாவெவ, தாதுசேனபுர, தியவர பகுதியில் வைத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கலாவெவ விஜிதபுர பகுதியை சேர்ந்த வர்த்தகர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அவருக்கு சொந்தமான வியாபார நிலையத்தை சோதனைக்குற்படுத்திய போது அங்கிருந்து ஜெலநைட் கூறு 243, வெடிமருந்து 12 கிலோ 500 கிராம், டெடனேடர் 145 மற்றும் 36 கிலோவிற்கும் அதிகமான அமோனிய நைட்ரேட் கண்டுப்பிடிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: