முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டு ஜீவநகர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
60 அகவையுடைய பழனியாண்டி குமாரவேல் என்ற குடும்பஸ்தரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உடலம் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

0 comments: