Wednesday, May 8, 2019

அவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய இளம் பெண்.

அவுஸ்ரேலிய பிரதமர் மீது, பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஸ்கொட் மொரிசொன் இருந்து வருகின்றார். இந்தநிலையில் அங்கு எதிர்வரும் 18-ந் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. 


எனவே, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு தெரிவித்து, அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசொன் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசார நடவடிக்கைக்காக நியூசவுத்வேல்ஸ் பகுதியில் உள்ள அல்பரி என்ற இடத்தில், கிராமப்புற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஸ்கொட் மொரிசொன் மீது முட்டையை ஒன்றை வீசியுள்ளார். ஆனால், குறித்த பெண்ணினால் வீசப்பட்ட முட்டை அவரது தலையில் உடையாமல் தரையில் விழுந்து நொருக்கியுள்ளது. பிரதமரை முட்டை வீசி தாக்கிய பெண்ணின் செயலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். ஆனால், அவர் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தொடர்பில் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

இந்த செயற்பாடு தொடர்பில் ஸ்கொட் மொரிசொன் கருத்து தெரிவிக்கையில், தனது அரசியல் எதிரிகள் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டதாக பதிலளித்துள்ளார்.

Author: verified_user

0 comments: