மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி குடாமுனைக் கல் பகுதியில்; சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணொருவரை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தனது 11வயதுச் சிறுமியுடன் வசித்து வந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்தோடு, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக குறித்த சிறுமியும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (07) காலை சிசுவொன்றின் சடலத்தை மீட்டுள்ளதாகவும், குறித்த சிசுவின் சடலம் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்டு குழியில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் வசித்து வந்த வீடு மற்றும் வளவு சோதனை செய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


0 comments: