Thursday, May 23, 2019

சேதமாகும் படகுகளுக்கு பதிலாக புதிய படகுகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் உதவி


கடலில் சேதமாகும் கடற்தொழிலாளர்களின் படகுகளுக்கு பதிலாக புதிய கடற்தொழில் படகுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் உதவியளிக்கவுள்ளது.


இதற்காக புதிய படகினை கொள்வனவு செய்வதற்காக செலவாகும் தொகையில் 50 சதவீதத்தை நிவாரணமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலீப்வெத ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.



தற்பொழுது 55 அடி நீளமான புதிய கடற்தொழில் படகினை கொள்வனவு செய்வதற்கு 50 சதவீத நிவாரண நிதி வழங்கப்படுகின்றது.



இருப்பினும் கடற்தொழில் நடவடிக்கையின் போது கடலில் சேதமாகும் கடற்தொழில் படகுகளுக்கு இதுவரையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்

Author: verified_user

0 comments: