அரசாங்கத்தின் ஊழல் மோசடியை வெளிப்படுத்தும் 'டொப் டென்' இரண்டாவது சுற்று இன்று ஆரம்பிக்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மின்சாரத்தை விலைக்கு பெற்ற போது இடம்பெற்ற முறைக்கேடுகள் குறித்து, 11வது முறைப்பாடு கையூட்டல் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 10 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதும், அதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைபாடு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைக்கேடினால் நாட்டின் பொருளாதாரம் 87 பில்லியன் ரூபா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments: