தற்போது நிலவும் வரட்சியான காலநிலையின் காரணமாக, நீர்மின்சார உற்பத்தியான வரையறைக்கு உள்ளாக்கியுள்ளதனால், நாளாந்த மின்சார விநியோகத்தில் சவால் நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளது.
இதற்கமைய, காசல்றீ நீர்த்தேகத்தின் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நூற்றுக்கு 18.4 வீதத்தினாலும், கொத்மலை நீர்த்தேகத்தின் நீர்மட்டம் நூற்றுக்கு 39.6 வீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.
இதேநேரம், விக்டோரியா நீர்த்தேகத்தின் நீர்மட்டம் நூற்றுக்கு 25.2 வீதமாகவும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 78.3 வீதமாகவும் உள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், மின்சார உற்பத்தியில் வரையறைகள் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments: