Tuesday, May 7, 2019

இனங்கள் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை ஒழிக்க வேண்டும் - தயாசிறி


இனங்கள் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு பொருத்தமான சட்டங்களை உருவாக்காத பொறுப்பை அனைத்து அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதனுடன் மதங்கள் அடிப்படையில் அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டமைக்கான விளைவை தற்போது அனுபவிப்பதாக தயாசிறி ஜயசேகர இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: