Monday, May 20, 2019

உருளைக்கிழங்கு, பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் வர்த்தகம் சரிவு













கடந்த மூன்று வாரக்காலப்பகுதியினுள் உருளைக்கிழங்கு, பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் வர்த்தகம் நூற்றுக்கு 50 சதவீதம் அளவில் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, இதற்கு காரணம் என அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தகம் தற்காலிகமாக முடங்கியுள்ளதாக பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவர் அஸ்லாம் பஹாலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி, ஆடைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உருளைக்கிழங்கின் இறக்குமதியும் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட நிலைமை இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்தை தாம் நிராகரிப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: