Monday, May 20, 2019

யுத்தப் பயிற்சி குறித்த இறுவெட்டு ஒன்றினை வைத்திருந்த நபர் கைது


யுத்தப் பயிற்சி குறித்த இறுவெட்டு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: