ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளரை 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, ஜமால்டீன் நௌஷாட் என அழைக்கப்படும் குறித்த சந்தேகத்துக்குரியவரை தடுத்து வைத்து அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குருநாகல் பிரிவு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சந்தேகத்துக்குரியவர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
2006 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளராக செயற்பட்ட ஜமால்டின் நௌஷாட் என்பவர் நீண்ட காலமாக தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் கண்டி - அக்குறனையை அண்மித்த பகுதிகளில் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் அடங்கிய விரிவுரைகளை ஆற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 comments: