கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஸிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட காவற்துறை நிலையங்களிலிருந்து விசாரணை அறிக்கைகள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
இதற்கமைய நாளைய தினம் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஆயுதங்கள் இருக்கும் இடத்தை காண்பிப்பதாகவும் அதற்கமைய தமது குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கை வெளியாகியுள்ளன.
அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை மாகந்துரே மதூஸிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில், பாரிய அளவிலான 20 சம்பவங்கள் தொடர்பிலே முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொள்ளை, போதைப் பொருள் வர்த்தகம், கொலை மற்றும் அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 31 பேர் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட 7 பேரடங்கிய குழு விரைவில் ஒன்று கூடவுள்ளது

0 comments: