Tuesday, May 7, 2019

பேரூந்தில் மர்ம பொதி - சாரதி மற்றும் நடத்துனர் கைது!


கொழும்பு - கோட்டை - ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் பொதியொன்றை வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை தனியார் பேருந்தொன்றில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக பொதுமக்கள் காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி , குறித்த இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் மேற்படி பொதியை சோதனையிட்டதில் , பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் குறித்த பொதி அங்கு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் , சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , அதன் அருகில் உள்ள விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள சீ.சீ.டிவி கெமரா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பின்றி வீதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றமை குறித்து மேற்படி பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: