முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்விற்கு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
டீ.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாண பணியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் 33 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணை நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன முன்னிலையில் இடம்பெற்றது.

0 comments: