கிழக்கு கடற்படையினர் திருகோணமலையை அண்டியக் கடற்பகுதியில் நேற்று மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே குறித்த 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மற்றும் கின்னியாவைச் சேர்ந்த 18 - 60 வயதிற்கிடைப்பட்ட வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 5மீன்பிடி படகுகளும் , 5 வெளி இணைப்பு மோட்டார்களும் , 225 மீட்டர் நீளமான 5 சட்டவிரோத வலைகளும் மற்றும் 94 கிலோ கிராம் தொகை மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பிரதி கடல்வள பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

0 comments: