கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் , வவுனியா , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களின் அநேகமான பிரதேசங்களில் நாளை வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிபபிட்டுள்ளது.
இதன் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.
இந்த வெப்பமான காலநிலை காரணமாக உடல் வறட்சி , உடல் சோர்வு , தோலில் எரிச்சல் மற்றும் மயக்கம் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துமாறும் , நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

0 comments: