யுத்த வெற்றியின் பின்னர் 2011 இல் இடம்பெற்ற தேர்தலில் கூட எல்பிடியவில் UNP படுதோல்வியடையவில்லை என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் அவர் மேலும் கூறுகையில்,
சஜித் பிரேமதாசவுக்கு நாட்டில் பாரிய அலை ஒன்று வந்திருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி கூறிவந்த போதும் அந்த அலை கோத்தாபய என்ற பேரலையில் அள்ளுண்டு போயுள்ளது எல்லபிட்டியவில் தெட்டத்தெளிவாகியுள்ளது.
சஜித்தின் வருகையின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி பலம் பெறும் என சஜித் ஆதரவு அணியினர் கூறிவந்தனர். ஆனால் இலங்கை தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் ஐக்கிய தேசிய கட்சி எல்பிடியவில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட ஐக்கிய தேசிய கட்சி 30 சதவீதமான வாக்குகளை பெற்றிருந்தது. கடைசியாக நடந்த பாராளும்னற தேர்தலில் பெந்தர எல்பிடிய தொகுதியில் அக்கட்சி 40 வீதமான வாக்குகளை பெற்றிருந்தது. இருந்தபோதும் எதிர்வரும் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள சூழலில் நடந்த எல்பிடிய தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
எல்பிடியவில் ஒரு வட்டாரத்தைக் கூட வெல்ல முடியாத ஐக்கிய தேசிய கட்சியால் , 25 % வாக்குகள் எடுக்க முடியாத ஐக்கிய தேசிய கட்சியால் எவ்வாறு ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

0 comments: