Sunday, October 13, 2019

32 கோரிக்கைகளுடன் கோத்தாவை ஆதரித்த ஆறுமுகன் தொண்டமான்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (13.10.2019) காலை 9.30 மணியளவில், கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக தீர்மானிக்கப்பட்டது.
மேலும், 32 கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி தீர்மானம் எட்டபட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: