பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழங்கினார்.
இதன்போது பல அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புகளை பாராளுமன்ற அங்கத்தவர்கள் , பாராளுமன்ற உயர் அதிகாரிகள், சிங்கள ஊடகவியலாளர்கள் கேட்டு வாங்கியுள்ளனர்.
சிலோன் தவ்ஹீத் ஜமாத்தினர் சாட்சியம் வழங்கிவிட்டு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தை நோக்கி செல்லும்போது, பின்னே வந்து சிங்கள மொழி பெயர்ப்பு குர்ஆனை கேட்டுள்ளனர்.
அதேவேளை அப்துர் ராசிக்கின் சாட்சியம் சிங்கள ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், அதனைப் பார்த்த பௌத்தசிங்கள பிரமுகர்கள் சிலர் மற்றும் சில சிங்களவர்கள் அப்துர் ராசிக்கை, தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது சாட்சியத்தை பாராட்டியுள்ளனர்.
சில சிங்களவர்கள் அப்துர் ராசிக்கின் சட்சியம், ஒரு சிற்றுரையை போன்று இருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments: