மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை அண்டிய கடற்பிரதேசங்களில் கடலலை உயர்வடையும் அவதானம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பிரதேசங்களில் கடலலை 2.5 மீற்றர் அல்லது 3 மீற்றர் வரை இரவு 7 மணி முதல் இவ்வாறு உயர்வடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக கடலலை நிலப்பகுதிக்கு ஊடுருவக்கூடும் என்பதால் கடலோர வாழ் மக்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

0 comments: