Sunday, June 2, 2019

தொடர்ந்தும் உணவுதவிர்ப்பு போராட்டம்...

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரகளான எஸ்.வியாழேந்திரன் மற்றும் அத்துரலிய ரத்தின தேரர் ஆகியோர் மேற்கொண்டுள்ள அடையாள உணவுதவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.


நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நேற்று முந்தினம் குறித்த மூவரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.


இந்த நிலையில், அந்த போராட்டம் இன்று 3வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
நேற்றைய தினம் குறித்த போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம், பட்டதாரிகள் சங்கம் என்பனவும் ஆதரவு தெரிவித்தன.
இதேவேளை, ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் எனவும், அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்தும், மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் நேற்று காலை 6.50 அளவில் தாம் ஆரம்பித்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் தற்போது சுழற்சி முறையில் இடம்பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டம் இன்று 2வது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.
சுழற்சி முறையில் இடம்பெறும் இந்த போராட்டத்தில் தாம் மீண்டும் இணைந்துக் கொள்வதாக வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: