ஏப்பிரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்கு மறுதினம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாசிகுடா பகுதியில் உள்ள விருந்தகத்திற்கு சென்று சவுதி நாட்டவர்கள் சிலரை சந்தித்துள்ள காணொளி எமது செய்தி பிரிவிற்கு கிடைத்துள்ளது.
அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு 9.12 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர், குறித்த விருந்தகத்திற்கு வந்துள்ள விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.
பின்னர் அந்த விருந்தகத்திற்கு வந்திருந்த சிலர் அவரை காண வந்தனர்.
அவர்களுடன் 9.13 மணியளவில் விருந்தகத்திற்குள் செல்லும் கிழக்கு மாகாண ஆளுநர், 53 நிமிடங்களுக்கு பின்னர், அதாவது 10.06 மணியளவில் அங்கிருந்து குறித்த தரப்பினருடன் வெளியேறுகிறார்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் சவுதி நாட்டவர்கள் சிலரும் இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் எமது செய்தி பிரிவு பல முறை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் தொடர்பு கொண்டு வினவ முற்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.
0 comments: