Monday, May 13, 2019

UPDATE : நாடளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்கு சட்டம்


இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போது வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: