Monday, May 13, 2019

வன்முறையாளர்கள் சுட்டுவீழ்த்த உத்தரவிடுங்கள் - ரணிலுக்கு றிசாத் வலியுறுத்தல்



குருநாகல் பகுதியில் மிகப்பெரும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், வன்முறையாளர்களை சுட்டு வீழ்த்த உத்தரவிடுங்கள் என அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னர், அலரி மாளிகைக்குச் சென்ற றிசாத், குருநாகலில் அப்பாவி முஸ்லிம்கள் வன்முறையாளர்கள்  தாக்கப்பட்டுள்ளனர்.

அதனை முப்படையினரும் வேடிக்கை பார்க்கின்றனர். இந்நிலையில் நிலமையை கட்டுப்படுத்த வன்முறையாளர்களை சுட்டுவீழ்த்துங்கள் என உரத்த தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள பிரதமர் ரணில், உடனடியாக பாதுகாப்புச் சபையை கூட்டி அமைதியை ஏற்படுத்த முயலுவதாக உறுதியளித்துள்ளார்.

Author: verified_user

0 comments: