இப்போது பலரும் பல்வேறு பந்தயங்களில் ஈடுபடுவது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. சீனாவிலும் இந்த மாதிரி food blog என்ற பந்தயம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் அந்த நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், Octopus ஒன்றை உயிருடன் சாப்பிட்டு அதை நேரடியாக வீடியோ செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி குறித்த பெண்ணும் உயிருடன் இருக்கும் Octopus ஸை சாப்பிட ஆயத்தம் ஆக, Octopus அவரை முந்திக்கொண்டு அவர் தன்னை உண்ணாதுவாறு அந்த பெண்ணின் வாய் மற்றும் முகத்தை நன்றாக பற்றி பிடித்து கொள்கிறது. Octopus இப்படி செய்யும் என்று சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், அதனை சற்று சமாளிக்க சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அவரால் Octopus ல் இருந்து விடுபட முடிய வில்லை.
இதனால் அவருக்கு மிகவும் கடுமையான வலி ஏற்பட்டது. இருப்பினும், அவரது இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து ஒருவாறு Octopus ஸை தனது முகத்தில் இருந்து நீக்கி விட்டார். இதனால் அந்த பெண்ணுக்கு முகத்தில் சிறு காயமும் ஏற்பட்டது.
எவ்வாறானபோதும் Octopus ஸை உயிருடன் சாப்பிடும் பந்தயம் அங்கு அதிகமாக இருக்கும் நிலையில், இந்த பந்தயத்தில் ஈடுபடும் கணிசமான நபர்கள் வருடா, வருடம் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments: