Thursday, May 9, 2019

குறுகலான பாதையில் இலகுவாக நடக்கும் ரோபோ

மனிதர்களை போன்றே ரோபோக்களும் பல துறைகளில் சேவையாற்றும் வகையில் தொழில் நுட்பம் அதி வேகமாக முன்னேறி வருகின்றது. இப்படி இருக்க, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சர்வதேச ரோபோ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று மனிதர்களை போன்று இயங்கும் ரோபோக்களை தயாரித்து வருகிறது.

அந்த நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட மற்றுமொரு புதிய ரோபோ, மனிதர்கள் குறுகலான பாதையில் நடக்கும் போது நிதானமாக செல்வதை போன்று, அந்த ரோபோவும் குறுகலான பாதையில் மனிதர்களை போன்று சமாளித்து நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரோபோவின் ஒவ்வொரு பயிற்சியும் சமூக வலைத்தளத்தில் அப்டேட்டாக வெளியிடப்பட்டு வருகிறது. குறித்த வீடியோவில், அந்த ரோபோ ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மிகவும் குறுகலான பாதையில் செல்ல நடை மேடை போடப்பட்டுள்ளது. அந்த பாதையில் சிறிதும் தடுமாற்றம் இன்றி ப்ரோகிராம் செய்ததை போலவே அந்த ரோபோ சரியாக அடிமேல் அடிவைத்து நகர்ந்து பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வளைவு நெளிவாக இருக்கும் குறுகலான பாதையை கூட இலகுவாக அந்த ரோபோ கடக்கிறது. இந்த வீடியோ அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வீடியோவை அதிகமானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றார்

Author: verified_user

0 comments: