மக்கள் அச்சப்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த சிங்களவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் பொசன் போயா தினத்திற்கு முன்னர் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்த இலக்கு மிகவும் பயங்கரமானது என துண்டுப் பிரசுரம் விநியோகித்தவரே கைது செய்யப்பட்டுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை இரத்தினபுரி பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி, கெட்டலியன்பல்ல பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் கைப்பந்தாட்ட விளையாட்டிற்கு தொடர்புடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரால் பகிரப்பட்ட கையேட்டில் உள்ள விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கையேட்டில் குறிப்பிட்ட விடயம் எப்படி கிடைத்ததென பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

0 comments: