மாத்தளை – அலவதுகொட பிரதேசத்தில் வீட்டு தோட்டம் ஒன்றில் இன்று பிற்பகல் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளின் போது வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், வீட்டு தோட்டத்தில் கிணறு தோன்றுவதற்காக வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிபில பகுதியில் விற்பனை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி-56 ரக இரவைகள் 27 கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments: