Saturday, May 4, 2019

இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி


தம்புள்ளை – பக்கமுன வீதியில் உனபந்துருயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

முச்சக்கரவண்டியொன்றும், கெப்வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒன்றரை வயதான குழந்தையே பலியாகியுள்ளது.

சம்பவத்தில் குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரருடன், கெப்வண்டியின் சாரதியும் காயமடைந்து தம்புள்ளை மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பக்கமுன காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Author: verified_user

0 comments: