Sunday, May 26, 2019

புதையல் தோண்டிய எழுவர் கைது


கல்கிரியாகம – உல்பதகம பகுதியில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் கல்கரியாகம, நாச்சதுவ, தேவஹூவ மற்றும் பலாகல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் இன்றைய தினம் கெக்கிராவ நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Author: verified_user

0 comments: