Monday, May 13, 2019

றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தனிடம் கோரிக்கை!


தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையே இன்றைய தினம் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோருக்கிடையே இடம்பெற்றது.

இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு மாகல்கந்தே சுதந்த தேரர் சம்பந்தனிடம் கோரியுள்ளார்.

Author: verified_user

0 comments: