Friday, May 10, 2019

எரிபொருள் விலை சீர்திருத்தம் குறித்து தீர்மானம்

எரிபொருள் விலை சீர்திருத்தம் குறித்து தீர்மானிக்கும் விலை சூத்திர குழு இன்று கூடவுள்ளது.

நிதியமைச்சில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த குழு கூடி தீர்மானிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதம் 10ம் திகதியும் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

எனினும் இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பாடாது என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 132 ரூபாய்க்கும்இ ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 159 ருபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், ஒடோ டீசல் லீற்றர் ஒன்று 104 ருபாய்க்கும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 134 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: