தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹரான் ஹசீமின் உதவியாளரொருவரை விடுதலை செய்துக் கொள்வதற்காக ஹொரவ்பொத்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கையூட்டல் வழங்க முற்பட்ட நபர் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹரானின் உதவியாளரான அப்துல் மொஹமட் நியாஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் , எதிர்வரும் வழக்கு தினத்தில் அவருக்கு பிணை வழங்குவது தொடர்பில் காவற்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவிப்பதாக , 26 வயதுடைய குறித்த சந்தேகநபர் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: