கிழக்கு மாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, நீர்வெளியேறுதல், அதிக களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments: